டீ கடைக்குள் லாரி புகுந்ததில் 6 பேர் பரிதாப பலி

மேற்கு வங்காளம் மாநிலம் மிட்நாபூர் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த டீ கடைக்குள் லாரி புகுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டீ கடைக்குள் லாரி புகுந்ததில் 6 பேர் பரிதாப பலி
Published on: 

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் மிட்நாபூர் மாவட்டத்தில் உள்ள சாகாசால்க் கிராமத்திற்கு அருகே சாலையோரம் இருந்த டீ கடையில் நேற்று பலர் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த லாரி திடீரென டீ கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் இருந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com