கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு

கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச திரைப்பட விழா லோகோ
சர்வதேச திரைப்பட விழா லோகோ
Published on

புதுடெல்லி:

கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடத்த திட்டமிடப்பட்டது. உரிய விதிமுறைகளை பின்பற்றி திரைப்பட விழா நடத்தப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியிருந்தார். ஆனால் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் திரைப்பட விழாவை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ மற்றும் சுரேஷ் ரெட்டி ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், கொரோனா சூழலை ஆய்வு செய்த பிறகே, நவம்பரில் திரைப்பட விழா நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com