திருப்பதி அருகே சோகம் - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பதி அருகே சோகம் - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
Published on

திருப்பதி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் திருப்பதி அருகே குருவராயபள்ளியில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த வழியில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதன்மீது கார் திடீரென மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

விசாரணையில், விபத்தில் உயிரிழந்தோர் குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com