இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை

சென்னையில் 20 இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை செய்யப்படுகிறது. #IndianOil #Gas
சென்னை பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனையை அதிகாரிகள் தொடங்கி வைத்த காட்சி.
சென்னை பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனையை அதிகாரிகள் தொடங்கி வைத்த காட்சி.
Published on: 

தனியாக வீடு எடுத்து தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், நிறுவனங்களில் வேலை செய்யும் ஆண், பெண்கள் உள்ளிட்டோர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் 5 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் விற்பனையை தொடங்கி உள்ளது.

ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்குகளில் ரூ.1,354.50 அடையாள அட்டை நகல் செலுத்தி உடனடியாக இந்த சிறியவகை சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் 20 இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியன் ஆயில் தமிழகம்-புதுச்சேரி நிர்வாக இயக்குனர் ஆர்.சித்தார்த்தன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகரில் முதல்கட்டமாக 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை 20 இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 5 கிலோ சமையல் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட உள்ளது.

மாணவர்கள், நகரங்களில் தங்கி வேலை செய்யும் ஆண், பெண்கள், ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்குகளில் அடையாள அட்டை நகல், ரூ.1354 பணம் செலுத்தி சொந்தமாக பெற்றுக்கொள்ளலாம். சிலிண்டர் உபயோகப்படுத்தி விட்டு காலியானதும் ரூ.365 செலுத்தி பழைய சிலிண்டரை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.


இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் சார்பில் ஏற்கனவே வீடுகளுக்கு 14.2 கிலோ கியாஸ் 5 கிலோ சிலிண்டர் விநியோகம் நடைமுறையில் உள்ளது. புதிதாக சிறிய வகை சிலிண்டர்கள் மக்களிடம் தேவை ஏற்பட்டுள்ளதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 37 சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த 5 கிலோ எடை கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை நடைமுறையில் உள்ளது. ரெகுலேட்டர்கள் இந்த சூப்பர் மார்க்கெட்டுகள், பங்குகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X