பொன்னேரி அருகே 4-ம் வகுப்பு மாணவன் ‘திடீர்’ மரணம்

பொன்னேரி அருகே வீட்டில் தூங்கிய 4-ம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழந்தான். அவனது சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி அருகே 4-ம் வகுப்பு மாணவன் ‘திடீர்’ மரணம்
Published on

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த கூடுவாஞ்சேரி ஏழுமலையான் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. ஆட்டோ டிரைவர். இவருடை மகன் கவுசிகன் (வயது 8). பொன்னேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று இரவு கவுசிகன் ரசத்துடன் சோறு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினான். இரவு திடீரென அவனுக்கு வாந்தி ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் கவுசிகன் மயங்கி விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தபெற்றோர் அவனை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவுசிகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது சாவுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இறப்பதற்கு முன்பு கவுசிகனின் உடல் நிறம் மாறியதாக தெரிகிறது. எனவே அவன் வெளியில் எங்காவது சென்ற போது சாப்பிட்ட பொருட்களில் வி‌ஷம் இருந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com