திண்டுக்கல்லில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இருப்பினும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

நத்தம் அருகே வேம்பார்பட்டியை சேர்ந்த 45 வயதான நபர் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com