22,353 பேருக்கு தொற்று - ஆயுதப்படை வீரர்கள் 41 பேர் கொரோனாவுக்கு பலி

மத்திய ஆயுதப்படைகளில் 22 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 41 பேர் இதுவரை மரணமடைந்து உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று பாதுகாப்பு படையினரையும் விட்டு வைக்கவில்லை. சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப். போன்ற ஆயுதப்படை வீரர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான விவரங்களை பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘மத்திய ஆயுதப்படைகளில் 22 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 41 பேர் இதுவரை மரணமடைந்து உள்ளனர். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விதிமுறைகளின்படி ஆயுதப்படையினருக்கான மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு எதிரான வைரஸ் எதிர்ப்பு மருந்துகளான பாவிபிரவிர் மற்றும் ரெம்டெசிவிர் போன்றவை உள்ளன’ என்று கூறினார்.

தீவிரமாக தொற்று பாதித்தவர்களுக்காக ஆயுதப்படையினருக்கான 2 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக கூறிய ஸ்ரீபாத் நாயக், ஆயுதப்படைகளில் தொற்று பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com