

மதுரா:
உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இருவேறு விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு யமுனா தேசிய நெடுஞ்சாலையில் மான்ட் பகுதியில் கார் திரும்ப முயன்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு விபத்தில் நொய்டாவில் இருந்து வந்த கார், பேருந்துக்காக சாலையோரமாக நின்றுகொண்டிருந்த இருவர் மீது மோதியது. இதில் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக போலீசார் கூறினர். கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.