3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
Published on

இந்நிலையில் 3-வது போட்டி கடந்த 27-ந்தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பென் ஸ்டோக்ஸ் (112), அலஸ்டைர் குக் (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்தது.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல், ரபாடா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ரோலண்ட்-ஜோன்ஸின் அபார பந்து வீச்சால் 175 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் பவுமா அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் ரோலண்ட்-ஜோன்ஸ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஆண்டர்சன் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

178 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸ் ரன்னோடு சேர்ந்து இங்கிலாந்து 491 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 492 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

492 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. நேற்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்திருந்தது. எல்கர் 72 ரன்னுடனும், பவுமா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. எல்கர் சிறப்பாக விளையாடினார். பவுமா 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பிலாண்டர் (0), மோரிஸ் (24), மகாராஜ் (24) அடுத்தடுத்து வெளியேற தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது.

அணியின் ஸ்கோர் 252 ரன்னாக இருக்கும் எல்கர் 136 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தி மொயீன் அலி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 239 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.  இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி நான்கு விக்கெட்டும், ரோலண்ட்-ஜோன்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் சதம் அடித்ததுடன், இரண்டு இன்னிங்சில் சேர்த்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com