2015-16ல் தினமும் 360 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது: நெடுஞ்சாலைத்துறை

இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் தினமும் 360 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. #NationalHighwayDepartment #BasicRoadStatisticsofIndia2015-16
2015-16ல் தினமும் 360 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது: நெடுஞ்சாலைத்துறை
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் சாலை வழியாக அதிகபடியான போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் சாலை வசதிகளை மேம்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கிராமங்கள், நகர்ப்புறங்களில் சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடந்த 2015 மார்ச் முதல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 1.31 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது சராசரியாக தினமும் 360 கி.மீ. தொலைவுக்கு சாலை பணிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சாலைகளின் நீளம் 56.03 லட்சம் கிமீ தொலைவில் இருந்து 54.72 லட்சம் கிமீ ஆக அதிகரித்துள்ளது. 2013-14 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 170 கி.மீ. தூர சாலைகளும், 2014-15 காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 190 கி.மீ. தூர சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவழி, நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணியும் கடந்த காலங்களை காட்டிலும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2015-16 காலகட்டத்தில் சாலைப் பணிகளுக்காக ரூ.98,900 கோடி செலவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கிராமப்புறங்களில் சாலைகள் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   #NationalHighwayDepartment #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com