30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி - மத்திய அரசு இலக்கு

2020-2021 சாகுபடி ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், சாகுபடி ஆண்டாக கருதப்படுகிறது. 2019-2020 சாகுபடி ஆண்டில், 29 கோடியே 20 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2020-2021 சாகுபடி ஆண்டில் சம்பா பயிர்கள் விதைப்பு பணி குறித்து மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆணையாளர் எஸ்.கே.மல்கோத்ரா அனைத்து மாநில வேளாண்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சம்பா விதைப்பு பணி சில பகுதிகளில் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, சம்பா சாகுபடிக்கு உதவியாக இருக்கும்.

சம்பா பருவத்தில் 15 கோடி டன் உணவு தானியமும், குறுவை பருவத்தில் 14 கோடியே 84 லட்சம் உணவு தானியமும் என மொத்தம் சுமார் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com