ராமநாதபுரம் அருகே பள்ளி மேற்கூரை இடிந்து 3 மாணவர்கள் காயம்

ராமநாதபுரம் அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம் அருகே பள்ளி மேற்கூரை இடிந்து 3 மாணவர்கள் காயம்
Published on: 

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தை அடுத்த வாலிநோக்கம் அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து பலமாதங்கள் ஆகிவிட்டது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை சேதமடைந்த பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அங்கு படித்துக்கொண்டு இருந்த 4-ம் வகுப்பு மாணவன் விஷால், 2-ம் வகுப்பு மாணவன் சரவணன், மாணவி வாணிஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com