2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசம் படுதோல்வி

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்தது.
2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசம் படுதோல்வி
Published on

அதன்படி தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (113), மார்க்கிராம் (143), அம்லா (132) மற்றும் டு பிளிசிஸ் (135 அவுட் இல்லை) ஆகியோரின் சதத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 573 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்னில் சுருண்டது. ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். வங்காள தேசம் 426 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.

இதனால் வங்காள தேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு டு பிளிசிஸ் அழைத்தார். 426 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் வங்காள தேச பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் 172 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சிலும்  ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com