2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்; மழையால் ஆட்டம் 45 ஓவராக குறைப்பு

இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் 45 ஓவராக குறைப்பு.
2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்; மழையால் ஆட்டம் 45 ஓவராக குறைப்பு
Published on

இந்தியா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. மழை பெய்ததால் ஆட்டம் காலதாமதம் ஆனது. உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

உள்ளூர் நேரப்படி ஆட்டம் 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. மழையினால தாமதம் ஆனதால் ஆட்டம் 45 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com