இலங்கையில் விசா காலம் முடிந்து தங்கியிருந்த 27 இந்தியர்கள் கைது

இலங்கையில் விசா காலம் முடிந்து சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் விசா காலம் முடிந்து தங்கியிருந்த 27 இந்தியர்கள் கைது
Published on

கொழும்பு:

இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி இலங்கைக்கு அதிகளவில் செல்கின்றனர். குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் செல்கிறார்கள்.

இந்நிலையில், இலங்கையில் விசா காலம் முடிந்து சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் ஜாப்னா நகரில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஜோசியம் பார்க்கும் வேலை செய்வதற்காக இலங்கையிலேயே தங்கி இருந்தனர். மற்றவர்கள் இதர தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

முன்னதாக இம்மாதம் 11-ம் தேதி இலங்கையின் வடகிழக்கு பகுதியில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com