மும்பை தாராவியில் இன்று 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

மும்பை தாராவியில் இன்று 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1830 ஆக உயர்ந்துள்ளது.
தெர்மர் ஸ்கிரீன் செய்யப்படும் காட்சி (பழைய படம்)
தெர்மர் ஸ்கிரீன் செய்யப்படும் காட்சி (பழைய படம்)
Published on

மும்பை தாராவியில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருவதால் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருந்தாலும் கடந்த சில நாட்களாக தாராவியில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1830 ஆக உயர்ந்துள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com