ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் 22 துப்பாக்கிகள் முழங்கவில்லை

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் அரசு சார்பில் செலுத்தப்பட்ட மரியாதையில் 22 துப்பாக்கிகள் செயல்படவில்லை.
ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் துப்பாக்கிகளுடன் காவலர்கள்
ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் துப்பாக்கிகளுடன் காவலர்கள்
Published on

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 19ம் தேதி காலமானார்.

ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல் மந்திரி ஆவார். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தற்போதைய பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், அவரது மறைவிற்கு பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறினார்.

இதனையடுத்து சுப்பாவுல் பகுதியில் உள்ள ஜெகன்நாத்தின் சொந்த கிராமத்திற்கு அவரது சடலம் தகனத்துக்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று தயார் நிலையில் இருந்தன. அரசு சார்பில் துப்பாக்கிகள் முழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ யதுவன்ஷ் குமார் யாதவ் கூறுகையில், ‘பீகாரின் முன்னாள் முதல்வரான ஜெகன்நாத்துக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம். இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com