

அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரையும் நேரடி ஒலிபரப்பு செய்ய விரும்பியது.
தற்போது ஐசிசியுடன் இதற்கான ஒலிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. பிசிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரேடியோ 4 லாங் வேப், பிசிசி ஸ்போர்ட் வெப்சைட் ஆகியவற்றில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறது. இந்த தொடரோடு 2023 வரை நடைபெறும் ஐசிசி-யின் முக்கியமான தொடர்களையும் ஒலிபரப்பு செய்ய இருக்கிறது.