

எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஒன்றுக்கும் மேற்பட்ட மாடல்களில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் Tenaa வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் வெவ்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு மாடல்களிலும் டிஸ்ப்ளே மற்றும் பிராசஸர்களில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முதல் மாடலில் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேவும், இரண்டாவது மாடலில் ஃபுல் எச்டி 1920x1080 பிக்சல் 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்களில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், மற்றொரு மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 அல்லது ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி அல்லது 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.