

புதுடெல்லி:
ஜாகுவார் இ-பேஸ் எஸ்.யு.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இ-பேஸ் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLA மற்றும் ஆடி Q3 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. அறிமுக நிகழ்வை மேலும் சுவாரஸ்யமாக்க புதிய இ-பேஸ் கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளது. புதிய கார் அறிமுகம் செய்யப்படும் போது பேரல் ரோல் அடுத்து கின்னசில் இடம்பிடித்துள்ளது.
புதிய எஸ்.யு.வி. காரில் ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க டிரைவ் வீல் கொண்ட X-டைப் மாடலுக்கு பின் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஜாகுவார் இது ஆகும். புதிய காரின் முன்பக்கம் பார்க்க எஃப்-டைப் போன்றே காட்சியளிக்கிறது. அதிகப்படியான ஸ்போர்ட் அனுபவம் வழங்கும் புதிய ஜாகவார் எஸ்.யு.வி. எல்.இ.டி. ஹெட்லேம்ப்களும் எஃப்-பேஸ் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் இ-பேஸ் கேபின் வடிவமைப்பு எதிர்கால அம்சங்களை கொண்டுள்ளது. உயரமானவர்களும் வசதியாய் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பு அமைந்துள்ளது. இதன் டேஷ்போர்டும் எதிர்கால வடிவமைப்புகளை வெளிப்படுத்துகிறது. மற்ற மாடல்களில் வழக்கமாக வழங்கப்படுவதை போன்று 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர 12.3 இன்ச் TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவினை தேர்வு செய்யும் வதியும் வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த காரில் இன்கண்ட்ரோல் ப்ரோ சூட் செயலிகளுக்கான வசதி வழங்கப்பட்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஜாகுவார் மாடல்களில் வழக்கமாக வழங்கப்படும் சுழலும் டையலுக்கு பதிலாக ஸ்போர்ட்ஸ் மாடல்களைப் போன்று கியர் ஷிஃப்டர் மாற்றப்பட்டுள்ளது. ஜாகுவார் இ-பேஸ் மாடலில் ஐந்து யு.எஸ்.பி. பாயிண்ட்களும், 4ஜி வை-பை ஹாட்ஸ்பாட் வசதி வழங்கும் திறனுடன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு அதிகபட்சம் எட்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு பெற முடியும்.
577 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டிருப்பதோடு பின்புற இருக்கைகளை மடக்கும் போது மேலும் நீட்டிக்க முடியும். எல்.இ.டி. டெயில் லைட்களை கொண்டுள்ள ஜாகுவார் இ-பேஸ் மற்ற மாடல்களிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 2018 ஜாகுவார் இ-பேஸ் மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதிகளை கொண்டுள்ள 2-லிட்டர் இன்ஜெனியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறனை பொருத்த வரை டீசல் மாடலில் 148 bhp, 177 bhp மற்றும் 237 bhp கொண்டுள்ளது. பெட்ரோல் டர்போ இன்ஜின்களில் 247 bhp மற்றும் 297 bhp செயல்திறன் கொண்டுள்ளது.
பெட்ரோல் இன்ஜின் கொண்டுள்ள மாடல் 5.9 நொடிகளில் மணிக்கு 0-100 வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் ஜாகுவார் இ-பேஸ் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஜாகுவார் இ-பேஸ் மாடலின் திராட்டிள், ஸ்டியரிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவற்றை கஸ்டமைஸ் செய்யும் வகையில் மாற்றியமைக்கக் கூடிய டைனமிக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
அறிமுக நிகழ்வில் ஜாகுவார் இ-பேஸ் செய்த கின்னஸ் சாதனை வீடியோவினை கீழே காணலாம்..,