

புதுடெல்லி:
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஜிக்சர் SP விலை ரூ.81,175 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்றும் புதிய ஜிக்சர் SF SP விலை ரூ.99,312 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மாடல்களில் சிங்கிள்-சேனல் ABS யுனிட் வழங்கப்படுகிறது. 2017 சுசுகி ஜிக்சர் SP பதிப்பில் மூன்று நிற பெயிண்ட் மற்றும் முன்பக்கம் கௌல் மற்றும் ஃபியூயல் டேன்க்கரில் ஸ்ட்ரைக்கிங் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜிக்சர் SP 2017 சின்னம் பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் புதுவித ஆரஞ்சு பிளாக் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சுசுகி ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மாடல்களின் இன்ஜின் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஜிக்சர் மாடலில் 154.9சிசி சிங்கிள் -சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.5 bhp, 8000 rpm செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜிக்சர் SF மாடலில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் வழங்க்பபட்டுள்ளதால் முந்தைய மாடல்களை விட அதிக திறன் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சுசுகி ஜிக்சர் மாடல்கள் செப்டம்பர் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 154.9சிசி இன்ஜின் கொண்ட ஜிக்சர் முதல் பதிப்பு விலை ரூ.79,501 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய ஜிக்சர் SPஹோன்டா CB ஹார்னட் 160R, பஜாஜ் பல்சர் NS 160 மற்றும் யமஹா FZ V2.0 மாடல்களுக்கும் ஜிக்சர் SF SP யமஹா ஃபேஸர் V2.0 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.