பாகிஸ்தான்: பனிமூட்டம் காரணமாக லாரி கவிழ்ந்து விபத்து - 20 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வளைவில் திரும்பிய லாரி வேன் மீது கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான்: பனிமூட்டம் காரணமாக லாரி கவிழ்ந்து விபத்து - 20 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைரபுர் பகுதியில் உள்ள தெரி என்ற இடத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிலக்கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. கடும் பனிமூட்டம் நிலவியதால் வளையில் திரும்பிய லாரி திடீரென அருகில் வந்த வேன் மீது கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவர் சிறிது நேரத்தில் பலியாகினர். 7 பேர் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே இடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 59 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com