ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டது.
கோப்பு காட்சி
கோப்பு காட்சி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியின் பால்ஹா மாகாணத்தின் சாரா மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

மேலும், இந்த தாக்குதலில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் 20 இருசக்கர வாகனங்கள், வெடிமருந்து கிடங்குகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com