குல்காம் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது

குல்காம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜம்மு:

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஆரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், குல்காம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com