குஜராத்: தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது சரக்கு ரெயில் மோதி 2 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
குஜராத்: தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது சரக்கு ரெயில் மோதி 2 பேர் பலி
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆளில்லா லெவல் கிராசிங்கில் கார் ஒன்று கடக்க முயன்றது.

ஆனால் தண்டவாளத்தை கடக்க முயன்ற காரின் மீது சரக்கு ரெயில் வேகமாக மோதியது. இதில் கார் நிலைகுலைந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்கு உள்ளானது. காரில் பயணித்த 2 பேர் பலியாகினர். தகவலறிந்து போலீசார் அங்கு சென்று பலியானோர் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் என தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com