காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #KashmirAttack #Bandipora
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீசார் 3 தரப்பினரும் இந்த அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirAttack #Bandipora

X

Maalai Malar
www.maalaimalar.com