

கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு பணியாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்திற்குட்பட்ட பாபுடங்கா பகுதியில் நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் அந்த பெட்ரோல் பங்கில் இருந்த இரு பணியாளர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.