நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி - 21 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமம்
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமம்
Published on

காத்மண்டு:

நேபாள நாட்டின் பஹ்மதி மாகாணம் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள லிடி கிராமத்தின் மலைத்தொடர் பகுதியில் 170-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழை (ஆகஸ்ட் 14) குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 37 வீடுகள் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்தன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் 21 பேரின் நிலை

என்ன என்பது தெரியாததால் அவர்களை தேடும் பணியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com