அமர்நாத் பஸ் விபத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் சென்ற பஸ் இன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமர்நாத் பஸ் விபத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
Published on

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.

62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று நிறைவடையும். பல்டல் மற்றும் பாஹல்காம் முகாம்களில் இருந்து மலைப்பாதை வழியாக தினந்தோறும் குழுக்களாக செல்லும் யாத்ரீகர்கள் அமர்நாத் ஆலயத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், யாத்ரீகர்களில் சிலர் இன்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். ரம்பான் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் உருண்டு கவிழ்ந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com