கூடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிலை கடத்தல் கும்பல் சிக்கியது

கூடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிலை கடத்தல் கும்பலை கைது செய்த போலீசார் கடத்திய சிலைகளை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிலை கடத்தல் கும்பல் சிக்கியது
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர் வயநாடு புலியாறு என்ற இடத்தில் ஜெயின் சமூகத்தினருக்கு சொந்தமான ஆனந்தநாதசாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பத்மாவதிதேவி, ஜூவாலா மாலினி உள்ளிட்ட 3 சிலைகள் மற்றும் அவைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள், வெள்ளி பூஜை தட்டுகள், வெள்ளி நவகிரக சிலைகள் ஆகியவை கடந்த 2001 டிசம்பர் 13-ந்தேதி திருட்டுபோனது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 15 ஆண்டுகளுக்கு பின் சிலை கடத்தல் கும்பல் கடத்திய சிலைகளை துண்டு துண்டாக வெட்டி விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் மலப்புரம் மாவட்டம் குண்டோட்டி பகுதியை சேர்ந்த முகமது (வயது 41), சுகுமாறன் (45), முகமது அலி (43), ஜெய்சல் (39) ஆகியோரை பிடித்தனர். விசாரணையில் இவர்கள் தான் ஆனந்தநாதசாமி கோவிலில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com