வங்கியில் ரூ.14 கோடி மோசடி செய்த மேலாளர் 8 ஊழியர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு

உத்தரப்பிரதேசத்தில் வங்கியில் ரூ.14 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் மற்றும் 8 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். #bankscam
வங்கியில் ரூ.14 கோடி மோசடி செய்த மேலாளர் 8 ஊழியர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு
Published on: 

ஹசன்பூர்:

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,700 கோடி மோசடி செய்து வெளி நாட்டுக்கு தப்பிச்சென்று விட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அனைத்து வங்கிகளிலும் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் மேலும் பல தொழிலதிபர்கள் வங்கி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வங்கி பணத்தை மோசடி செய்து இருப்பது வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹசன்பூரில் உள்ள வங்கி கிளையில் வங்கி அதிகாரிகள் கணக்கு தணிக்கையில் ஈடுபட்டபோது ரூ.14 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கியின் மேலாளர் விபின் குமார், விவசாயிக் காண கிரிடிட்கார்டு கணக்கு எண்களில் பணம் செலுத்தி பின்னர் அதை மற்ற கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் இவ்வாறு மொத்தம் ரூ.14 கோடி அளவுக்கு வங்கி பணத்தை சுருட்டியுள்ளார்.

இதில் அவருடன் 8 ஊழியர்களும் மோசடிக்கு உடந்தையாக செயல்பட் டுள்ளனர். இதுதொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் சி.பி.ஐ.யில் புகார் செய்தனர். அதிகாரிகள் வங்கி மேலாளர் மற்றும் 8 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த நடவடிக்கையாக இவர்கள் சஸ்பெண்டாகி கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. #bankscam #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com