துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 13 வீரர்கள் பலியானதாக தகவல்

துருக்கி - ஈராக் எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 13 பேர் பலியானதாக துருக்கி ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 13 வீரர்கள் பலியானதாக தகவல்
Published on

துருக்கியின் வடகிழக்கு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மின்வயர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி - ஈராக் எல்லையில் உள்ள ஸ்ரீநாக் மாகாண விமான ஏவுதளத்தில் இருந்து சென்ற கோகர் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது.

விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ள நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து ஆராய ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ள துருக்கி ராணுவ தலைமை பணியாளர் ஜெனரல் ஹூலூசி அகார் விபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

மீட்புப் பணிகளை மேற்கொள்ள விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்புக்குழு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக துருக்கி கவர்னர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com