அமெரிக்கா: ராணுவ விமான விபத்தில் 16 வீரர்கள் பலி

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இன்று ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் சென்ற 16 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
அமெரிக்கா: ராணுவ விமான விபத்தில் 16 வீரர்கள் பலி
Published on: 

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசிசிப்பி மாநிலத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியான லெஃப்லோர் கவுன்ட்டி வழியாக சென்ற அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான KC-130 ரக விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை இங்குள்ள காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

நொறுங்கிய வேகத்தில் தீப்பிழம்பாக மாறி எரியத் தொடங்கிய இந்த விமானத்தில் சென்ற 16 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக லெஃப்லோர் கவுன்ட்டி அவசர உதவித்துறை மேலாண்மை இயக்குனர் பிரெட் ரான்ட்லே குறிப்பிட்டுள்ளார்.

கடற்படைக்கு தேவையான சரக்குகளையும், வீரர்களையும் ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? என்பது தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X