ராஜஸ்தானில் பரிதாபம் - பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மர்மச்சாவு

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் குடிசை வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தனர்.
குடிசை வீடு
குடிசை வீடு
Published on

ஜோத்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே லோதா கிராமத்தில் உள்ள டெச்சு பகுதியில், பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தனர். இவர்கள் அனைவரும் பில் சமூகத்தை சேர்ந்த இந்துக்கள்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்களில் 10 பேர் குடிசை வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் இருந்து வேதிப்பொருள் வாசனை வெளிவந்தது. எனவே 10 பேரும் விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருளை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனையிட்டனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் உயிரோடு தப்பியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் முடிவில் தான் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இறந்ததற்காக உண்மையான தகவல் வெளிவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com