எகிப்து: வேன் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி

எகிப்து நாட்டில் உள்ள மின்யா பகுதியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான வேன்
விபத்துக்குள்ளான வேன்
Published on

கெய்ரோ:

எகிப்து நாட்டின் தெற்கு பாலைவன மாகாணமான மின்யாவில் உள்ள சாலை ஒன்றில் 20-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. 

மோசமான நிலையில் இருந்த சாலையில் மிகவும் வேகமாக சென்றுகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் மறுபுறம் வந்து கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com