பெர்த் டெஸ்டில் சதமடித்து பல்வேறு சாதனைகளை வசமாக்கினார் ஸ்டீவன் ஸ்மித்

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் பல்வேறு சாதனைகளை தன் வசமாக்கியுள்ளார்.
பெர்த் டெஸ்டில் சதமடித்து பல்வேறு சாதனைகளை வசமாக்கினார் ஸ்டீவன் ஸ்மித்
Published on

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 138 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 22-வது சதமாகும். மேலும் இந்த வருடத்தில் டெஸ்டில் 1000 ரன்களை கடந்துள்ளார்.

இந்த சதம் மூலம் 22 சதங்களை அதிவேகமாக அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டான் பிராட்மேன் 58 இன்னிங்சில் 22 சதங்கள் அடித்துள்ளார். இந்திய டெஸ்ட் ஜாம்பவான் கவாஸ்கர் 101 இன்னி்ங்சில் அடித்துள்ளார். தற்போது ஸ்மித் 108 இன்னிங்சில் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். தெண்டுல்கர் 114 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com