நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து, 365 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டை
முட்டை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 355 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 365 காசுகளாக உயர்ந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-

சென்னை-375, ஐதராபாத்-320, விஜயவாடா, தனுகு-328, மும்பை-372, மைசூரு-352, பெங்களூரு-350, கொல்கத்தா-379, டெல்லி-330.

கறிக்கோழி கிலோ ரூ.77-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.58-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பிறமண்டலங்களில் முட்டை விலை உயர்ந்து உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com