காஷ்மீர்: சோபியன் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் பதிலடியில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
காஷ்மீர்: சோபியன் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்திற்குட்பட்ட இமாம் சாஹிப் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ஆனந்த்நாக் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com