Kushi(4 / 5)
நடிகர் விஜய் - இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் உருவான படம் குஷி. இப்படம், 2000-ம் ஆண்டு மே 19ம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.
படத்தின் கதையும் இளசுகளுக்கு ஏற்ற ‘குஷி’யான காதல் கதைதான். ஈகோ பிடித்த இரண்டு காதலர்கள், தங்கள் காதலை தெரிவிக்காமல் கடைசி வரை, சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். கடைசியில், காதலை தெரிவிக்க வேண்டும் என்கிற நிலை வரும் போது, இருவராலும் அதை சொல்லிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதையெல்லாம் கடந்து கடைசியில் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.
இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் படத்தை கடந்த 25ம் தேதி 263க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ‘குஷி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது .
கர்நாடகாவில் குஷி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர்கள்
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். நகைச்சுவை நடிகராக விவேக், மும்தாஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இயக்கம்
எஸ்.ஜே. சூர்யாவின் அறிமுக திரைப்படமான வாலி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பிறகு, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் படம் இயக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைத்ததை அடுத்து குஷி இயக்கினார்.
இசை
தேனிசை தென்றல் தேவாவின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்.
வசூல் விவரம்
இப்படம் முதல் நாள் பிரீ புக்கிங்கில் ரூ. 35 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கில்லி படம் ரீ-ரிலீஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்றதுபோல் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படம், இதுவரை ரூ. 2 கோடி மேல் வசூலித்துள்ளதாக தகவல்.


