King Of Kotha

King Of Kotha

வில்லனின் அராஜகங்களை அடக்க களமிறங்கும் நாயகன் குறித்த கதை.
Published on
King Of Kotha(3 / 5)

ஆங்கிலேயர்களின் காலத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இடம் கொத்தா. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அங்கு குடிபெயர்கிறார்கள். குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக இருந்த கொத்தா குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாக மாறுகிறது. அந்த இடம் போதைப் பொருள் வியாபாரம் செய்யும் சபீர் என்கிற ரவுடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கொத்தாவிற்கு புதிய காவல் அதிகாரியாக பிரசன்னா வருகிறார்.

இறுதியில் ஊரை விட்டு போன துல்கர் சல்மான் கொத்தாவிற்கு வந்தாரா? கொத்தாவை விட்டு துல்கர் செல்ல காரணம் என்ன? துல்கரை கண்டு சபீர் பயப்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சபீர். மற்ற கதாபாத்திரங்கள் மனதை கவரவில்லை.

ரவுடிசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி. விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை போக போக குறைந்து விடுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும்படி திரைக்கதை அமைத்து இருப்பது படத்திற்கு பலவீனம்.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையில் ரித்திகா சிங் ஆடும் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதுபோல் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவையும் பாராட்டலாம். 90-களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

வீடியோக்கள்

கிங் ஆஃப் கொத்தா

X

Maalai Malar
www.maalaimalar.com