Kenatha Kanom

Kenatha Kanom

ஊரில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினையை கதை கருவாக கொண்டு உருவாகி இருக்கும் படம் கெணத்த காணோம்.
Published on
Kenatha Kanom(3.5 / 5)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. ஊரில் மழை இல்லாததால் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பல்வேறு வழிகளை யோசிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஊர் தலைவர் மக்களுடன் சென்று கலெக்டரிடம் தண்ணீர் வேண்டி மனு கொடுக்கிறார். ஆனாலும், நடவடிக்கை இல்லை.

இதனால், ஊர் மக்கள் சேர்ந்து நிலத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஒருவரை அழைத்து வருகிறார்கள். அவர் கண்டுபிடித்த இடம் யோகி பாபுவின் நிலத்திற்குட்பட்டுட்டது. முதலில் மறுக்கும் யோகிபாபு பின்னர், மக்களின் நலத்திற்காக ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த இடத்தை தோண்டி பார்க்கும்போது அங்கு பெரிய டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.

இது வௌியே தெரியவர அந்த ஊரே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இதற்கிடையே, யோகி பாபுவின் காதல். தண்ணீர் இல்லாத ஊருக்கு மகள் லவ்லின் சந்திரசேகரை கட்டிக்கொடுக்க மறுக்கிறார் தந்தை. பின்னர், பள்ளம் தோண்டுவதால், ஊருக்கு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் மகளை கட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், டைனோசர் எலும்புக்கூடு கிடைத்த இந்த சூழலில், அந்த ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா? யோகி பாபு காதல் கைக்கூடியதா என்பது படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்

கதாநாயகனாக நடித்திருக்ம் யோகிபாபு சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபுவின் காதலியாக வரும் லவ்லின் சந்திரசேகர் கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமாக நடித்திருக்கிறார்.

ரேச்சல் ரேபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் ஊணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்கம்

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கைய்யா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினையை கதை கருவாக கொண்டு அனைவரும் ரசிக்கும்படியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.

இசை

நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்திற்கு பலம்.

ஒளிப்பதிவு

படத்தின் காட்சிகள் கதைக்கு பொருத்தம்.

வீடியோக்கள்

கெணத்த காணோம்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com