IPL: Indian Penal Law

IPL: Indian Penal Law

லாக்கப் டெத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஜிபிஎல்.
Published on
IPL: Indian Penal Law(2.5 / 5)

கிஷோர் தனது மனைவி அபிராமி, தங்கை மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிஷோர், சிறு பிரச்சனையில் வேலையை விட்டு சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். ஃபுட் டெலிவரி செய்து வரும் டிடிஎஃப் வாசன், கிஷோரின் தங்கை மகளை காதலித்து வருகிறார்.

ஒரு நாள் கிஷோருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபடுகிறது. இதிலிருந்து கார் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போஸ் வெங்கட், லாக்கப்பில் ஒருவரை அடித்து கொன்று விடுகிறார். இந்த பழியை கிஷோர் மீது சுமத்தி அவரை சிக்க வைக்கிறார்.

இறுதியில் லாக்கப் டெத் கொலை வழக்கில் இருந்து கிஷோர் மீண்டாரா? கிஷோரை சிக்க வைக்க காரணம் என்ன? டிடிஎஃப் வாசன் கிஷோருக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பத்தினருடன் சந்தோஷமாகவும், குடும்ப கஷ்டத்திற்காக வருந்துவது, அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். பொறுப்பான குடும்பத் தலைவியாகவும், கணவருக்காக வருந்தும் இடத்திலும் அபிராமி நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய டிடிஎஃப் வாசனுக்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியான போஸ் வெங்கட், கிஷோரின் நண்பர் சிங்கம்புலி, முதலமைச்சர் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இயக்கம்

லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி. முதல் பாதி திரைக்கதை புரியாமலும் இரண்டாம் பாதி திரைக்கதை மெதுவாகவும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம். அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

இசை

அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணிசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஒளிப்பதிவு

பிச்சுமணியின் ஒளிப்பதிவை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

வீடியோக்கள்

ஐபிஎல்

X

Maalai Malar
www.maalaimalar.com