காமன்வெல்த் உயரம் தாண்டுதல் போட்டி - இந்தியாவின் தேஜஸ்வி சங்கர் வெண்கலம் வென்றார்

உயரம் தாண்டுதலில் தேஜஸ்வி சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
தேஜஸ்வி சங்கர்
தேஜஸ்வி சங்கர்
Published on

பர்மிங்காம்:

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வி சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com