காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டி - வெள்ளி வென்றது இந்திய அணி

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.இதனால் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆடவர் ஹாக்கி அணி
ஆடவர் ஹாக்கி அணி
Published on: 

பர்மிங்காம்:

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இன்று விளையாடியது.

இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது.

இதன்மூலம் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com