சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை பருப்பு அடை

சர்க்கரை நோயாளிகள் கோதுமையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவையில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை பருப்பு அடை
Published on

கோதுமை ரவை - 1 கப்
கடலைப்பருப்பு - கால் கப்
புளித்த தயிர் - அரை கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு - 1/4 டீஸ்பூன்.

செய்முறை  :

பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வறுத்த கோதுமை ரவை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடம் புளிக்க வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான கோதுமை ரவை பருப்பு அடை ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com