சத்தான கோதுமை மிளகு வெங்காய தோசை

டயட்டில் இருப்போர் கோதுமை மாவில் மிளகு, வெங்காயம் சேர்த்து கலந்து, தோசை செய்து சாப்பிடலாம். இந்த தோசைக்கு கோதுமை மிளகு வெங்காய தோசை என்று பெயர்.
சத்தான கோதுமை மிளகு வெங்காய தோசை
Published on

கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* மிளகை பொடித்து கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

* இப்போது சூப்பரான கோதுமை மிளகு வெங்காய தோசை ரெடி!!!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com