

ஷேவிங் செய்யும் போது நீங்கள் கூர்மையான பிளேடுகள் பயன்படுத்தும் போது, உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதனை பயன்படுத்தும் போது முடியானது அதிக அடர்த்தியாக வளர்ந்துவிடுவதை தடுத்திட முடியாது. ஷேவிங் செய்வதால் ஏற்படும் எரிச்சல், மெழுகு வேக்சிங் செய்யும் போது வராது.
வெதுவெதுப்பான அல்லது சூடான மெழுகு பயன்படுத்தி வேக்சிங் செய்வது பொதுவான முறையாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும். இது குளிர் வேக்சிங்கை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். பெரும்பாலான அழகுநிலையங்களில் செய்யப்படும் வேக்சிங்கும் இது தான்.
வேக்சிங் என்பது சூடான மெழுகை உங்களுடைய தோலின் மேல் போட்டு, அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் முடிகளை ரேப்பர்களை பயன்படுத்தி அதன் மேல் ஒட்டி, முடிக்கு நேரெதிர் திசையில் பிய்த்து எடுப்பதுதான் வேக்சிங் முறையாகும். மெழுகின் அளவை கொஞ்சம் தாரளமாய் பயன்படுத்தினால், வலியின் அளவை குறைத்திட முடியும்.