தர்ப்பூசணி மசாலா ஜூஸ்

நீர்சத்து நிறைந்த தர்ப்பூசணியை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் உடல் சூட்டை தணிக்கலாம். இன்று தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தர்ப்பூசணி மசாலா ஜூஸ்
Published on

தர்ப்பூசணி - 1
இஞ்சி - 2 துண்டு
புதினா - சிறிதளவு
எலுமிச்சை பழம் - 1 (சாறு பிழியவும்)
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகு தூள் - கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு - தேவையான அளவு

உப்பு - 1 டீஸ்பூன்

மிக்சியில் இஞ்சியையும், புதினாவையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அதுபோல் தர்ப்பூசணியின் தசை பகுதியை வெட்டி எடுத்து கூழாக அரைக்கவும்.

அதனுடன் இஞ்சி, புதினா விழுதை சேர்த்துக்கொள்ளவும்.

மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு போன்றவற்றையும் கலந்து பரிமாறவும்.

சுவையான தர்ப்பூசணி மசாலா ஜூஸ் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com