வெஜிடபிள் எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதத்தில் காய்கறிகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று காய்கறி சேர்த்து எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெஜிடபிள் எலுமிச்சை சாதம்
Published on

பச்சரிசி - 1 கப்,
எலுமிச்சம் பழம் - 2,
கேரட் - 1,
பீன்ஸ் - 15,
பட்டாணி - அரை கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
முந்திரி - 10,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்த பின்னர் காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

சூப்பரான காய்கறி எலுமிச்சை சாதம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com