சத்து நிறைந்த தக்காளி கோதுமை தோசை

சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த தக்காளி கோதுமை தோசை
Published on

தக்காளி - 2,
கோதுமை மாவு - 1 கப்,
பெரிய வெங்காயம் - 1,
இட்லி மாவு - அரை கிராம்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
காய்ந்தமிளகாய் - 2,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

சீரகம் - 1 டீஸ்பூன்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை கோதுமை மாவுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதனுடன் காய்ந்தமிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

இட்லி மாவுடன் அரைத்த தக்காளி மாவு கலவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளவும்.

பின்பு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை ரெடி.

தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com